தேர்தல் விதிகளை மீறியதாக இரண்டு வேட்பாளர்கள் கைது!

Election law violations : Two candidates arrested

தேர்தல் விதிகளை மீறியதாக இரண்டு வேட்பாளர்கள் கைது!

இன்று நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது 20 மாவட்டங்களில் தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இரண்டு தேர்தல் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG நிஹால் தல்துவா தெரிவித்தார்.

 

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அதிக எண்ணிக்கையிலான கைதுகள் சட்டவிரோத பிரச்சாரத்துடன் தொடர்புடையவை என்றும், மற்ற மீறல்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் தாக்குதல்கள் அடங்கும் என்றும் கூறினார்.