ட்ரம்ப் முன்னிலை! - தற்போதைய நிலை என்ன?

ட்ரம்ப் முன்னிலை! - தற்போதைய நிலை என்ன?

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் இலங்கை நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி, இன்று காலை முடிவடைந்தது. 

தொடர்ந்து பல்வேறு மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தொடக்க நிலையில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருக்கிறார். 

தற்போதைய நிலவரப்படி ட்ரம்ப் 52 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறார். கமலா ஹாரிஸ் 46 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 270 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில், ட்ரம்ப் கட்சி தற்போது 178 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரம் கமலா ஹாரிஸ் 99 இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறார். எனினும் இன்னும் பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது தான் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.!