உடல் நலம்: முட்டையில் உள்ள கொழுப்பு ஆபத்தானதா - ஆய்வுகள் கூறுவதென்ன?
Tech
ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது.
``ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்படுகிறது. எனவே அது அதிக சத்துகள் கொண்டதாக உள்ளது,'' என்கிறார் அமெரிக்காவில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து அறிவியல் துறை அசோசியேட் பேராசிரியராக இருக்கும் கிறிஸ்டோபர் பிளெஸ்ஸோ.
மற்ற உணவுகளுடன் சேர்த்து முட்டை சாப்பிடும்போது, அதிக வைட்டமின்களை நமது உடல் கிரகித்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. உதாரணமாக, சாலட் உடன் ஒரு முட்டையை சேர்த்துக் கொண்டால், அந்த சாலட் மூலம் நாம் எடுத்துக் கொள்ளும் விட்டமின்-ஈ அளவு அதிகரிக்கிறது என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆனால் அதிக கொழுப்புச் சத்து கொண்டது என்பதால் பல பத்தாண்டுகளாக முட்டை சாப்பிடுவது சர்ச்சைக்கு உரியதாக இருந்து வருகிறது.
முட்டை சாப்பிட்டால் இருதய நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சில ஆய்வுகள் தொடர்பு படுத்தியுள்ளன. ஒரு நாளுக்கு மனிதனுக்கு 300 கிராம் கொழுப்புச் சத்து தேவை என்று அமெரிக்க உணவு முறை வழிகாட்டுதல்கள் சமீப காலம் வரை பரிந்துரைத்தன. ஒரு முட்டையின் கருவில் 185 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, அதாவது தினசரி தேவையில் பாதிக்கும் மேல் இதில் உள்ளது.
முட்டை நமக்கு ஊறு விளைவிக்கும் என்பது சரியா?
கல்லீரல் மற்றும் குடல்களில் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்ட்ரால் எனும் மஞ்சள் நிறத்திலான கொழுப்பைக் கொண்ட கொழுப்பு, நமது உடலின் செல்கள் அனைத்திலும் உள்ளது. அது கெடுதலானது என்று சாதாரணமாக நாம் நினைக்கிறோம். ஆனால் நமது செல் சவ்வுகளில் முக்கியமானதாக உள்ள இணைப்பு படலத்தை அளிக்கிறது. விட்டமின் டி உருவாக்கவும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரக்கவும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கவும் அது தேவைப்படுகிறது.
நமக்குத் தேவையான அனைத்து கொழுப்புச் சத்துகளையும் நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். ஆனால் நாம் சாப்பிடும் மாட்டிறைச்சி, இறால் மற்றும் முட்டை உள்ளிட்ட இறைச்சிப் பொருட்களிலும் அது கிடைக்கிறது. பாலாடைக் கட்டி மற்றும் வெண்ணெயிலும் கிடைக்கிறது.
- முக்கிய மரபணுவை இழந்ததால்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு வருகிறதா?
ரத்தத்தில் உள்ள கொழுப்புப் புரத மூலக்கூறுகள் மூலமாக உடல் முழுக்க கொழுப்புச் சத்து கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு மாதிரியான கொழுப்புப் புரதங்கள் உள்ளன. தனிப்பட்ட உடலமைப்பைப் பொருத்து, இருதய நோய் வருவதற்கான ஆபத்து அளவு நிர்ணயிக்கப் படுகிறது.
குறைந்த அடர்வு கொண்ட கொழுப்புப் புரதம் கெடுதலான கொழுப்பு என கருதப்படுகிறது. கல்லீரலில் இருந்து ரத்த நாளங்கள் மற்றும் உடலின் திசுக்களுக்கு கொழுப்பு எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதற்கு இது காரணமாகி, இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் கொழுப்புச் சத்து மிகுந்த உணவை சாப்பிடுவதால் இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது என்பதற்கான தொடர்பை ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இதற்கிடையில், இறால்களுடன் சேர்த்து முட்டையும் குறைந்த செறிவுள்ள கொழுப்பு அதிகம் உள்ள ஒரே உணவாக இருக்கிறது.
``இறைச்சி மற்றும் இதர இறைச்சி பொருட்களைவிட முட்டையில் அதிக கொழுப்புச் சத்து உள்ளது என்றாலும், செறிவுள்ள கொழுப்பு ரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கும். பல ஆண்டுகளாக பல ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப் பட்டுள்ளது,'' என்று அமெரிக்காவில் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள மரியா லஸ் பெர்னான்டஸ் கூறுகிறார்.
முட்டை சாப்பிடுவதற்கும், இதயக் கோளாறுகளுக்கான ஆபத்து அதிகரிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவருடைய சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், நீண்ட காலம் தொடர்ந்து முட்டை உட்கொள்வது பற்றிய சில ஆய்வுகள் வேறு மாதிரியான முடிவுகளைத் தருகின்றன.
நாம் சாப்பிடும் கொழுப்புச் சத்துகளை நமது உடல் தா
னே சமன் செய்து கொள்ளும் என்பதால், முட்டை உடல் நலத்தின் மீது செலுத்தும் தாக்கம் பற்றிய விவாதம் இப்போது ஓரளவுக்கு மாறியுள்ளது.
2015 ஆம் ஆண்டில், 40 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்ற ஆய்வில் உணவு மூலம் கிடைக்கும் கொழுப்பு சத்துக்கும் இருதய நோய்களுக்கும் தொடர்பு உள்ளதை நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
- சுகப்பிரசவ - சிசேரியன் குழந்தைகள் உடல்களில் மாறுபட்ட பாக்டீரியாக்கள் - ஆச்சரிய ஆய்வு
``உணவு முறையில் கொழுப்புச் சத்து எடுத்துக் கொண்டால் அதை நல்ல முறையில் கட்டுப்படுத்திக் கொள்ளும் அமைப்பு மனிதர்களுக்கு உள்ளது. அதை குறைந்த கொழுப்பாக தானாகவே மாற்றிக் கொள்ளும்'' என்கிறார் மரியா.
முட்டையில் உள்ள கொழுப்பைப் பொறுத்தவை உடல்நலக் கேடுக்கான ஆபத்து குறைவானதாக உள்ளது.
நமது ரத்த நாளங்களில் ஆக்சிஜனுடன் சேரும்போது கொழுப்பு அதிக கெடுதல்களை ஏற்படுத்தும். ஆனால், முட்டையில் உள்ள கொழுப்பில் ஆக்சிஜன் சேர்வது கிடையாது என்கிறார் பிளெஸ்ஸோ.