வரலாற்றில் முதல்முறையாக பாலைவனத்தில் பனிப்பொழிவு...!
வரலாற்றில் முதல்முறையாக,
சவூதி அரேபியா நாட்டின் அல்-ஜாவ்ப் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
வறண்ட பாலைவன நிலப்பரப்பைக் கொண்ட அல்-ஜாவ்ப் பகுதியில் ஆலங்கட்டி மழையுடன், சூறாவளிக் காற்றும் வீசியதால் அது குளிர்பிரதேசமாகவே மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவால் எங்கும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கும் பாலைவனப் பிரதேசத்தை சவூதி அரேபியா மக்கள் அதிசயத்துடன் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.