ஒன்றிணையாது போயிருந்தால் இரு சாராரும் அழிந்து போயிருப்போம் - KinniyaNews
நாட்டில் அனைத்து துறைகளும் இன்று பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவ்வாறான பின்னடைவை தடுப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வழங்கும் ஒத்துழைப்பு அளப்பரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ பெறும் வெற்றிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகபெறும் பங்களிப்பை வழங்குவதாக கூறினார்.
´நாட்டுக்காக கோட்டாவிற்கு கை கொடுத்தல்´ என்ற தொனிப்பொருளில் தெஹிவளை பகுதியில் நேற்று (08) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன், பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவும் கலந்துக்கொண்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்...
´ஒன்றிணையாது போயிருந்தால் இரு சாராரும் அழிந்து போயிருப்போம். கடந்த ஐந்து ஆண்டுகளை பற்றி ஒரு புத்தகம் எழுதினால் அதற்கு கட்டாயம் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும்.
சுதந்திரக் கட்சியின் அர்ப்பணிப்பு அளபரியது. நாட்டின் வெற்றிக்காக, சுகாதார நலன்களுக்கு அது பாரிய உந்துசக்தியாகும்.
வெற்றியின் பாரிய பங்கு சுதந்திரக் கட்சிக்கு உரித்தானது. அதற்கு பொதுஜன முன்னணியில் உள்ள பலர் எதிர்ப்பை தெரிவிக்கலாம். எப்படியிருந்தாலும் உண்மை அதுதான்´ என்றார்.