பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அபார வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டி இன்று லாஹூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக்க 55 ஓட்டங்களையும் அனுஷ்க பெர்னாண்டோ 33 ஓட்டங்களையும் பனுக ராஜபக்ஷ 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் முஹம்மத் ஹஸ்னைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு   166 ஓட்டங்கள் வெற்றி இலக்காக  நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் நுவன் பிரதீப் மற்றும் இசுரு உதான தலா 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.