சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை: ''நினைத்துப் பார்க்க முடியாத அளவு கச்சா எண்ணெய் விலை உயரும்

World

சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரிக்கை: ''நினைத்துப் பார்க்க முடியாத அளவு கச்சா எண்ணெய் விலை உயரும்

இரானால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின்  சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியொன்றில், கஷோக்ஜி கொலை குறித்து தன் மீது சுமத்தப்படும்  குற்றச்சாட்டுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில்  ஏற்படும் பதற்றம் ஆகியவை குறித்து பேசியிருக்கிறார். 

சௌதி அரசை விமர்சித்து பத்திரிகைகளில் எழுதி வந்த அந்நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் கஷோக்ஜி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கியில் உள்ள சௌதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டார். 

  • கஷோக்ஜி கொலை: ‘இளவரசரை நீக்குவதா? சாத்தியமே இல்லை’ செளதி அமைச்சர் கண்டிப்பு
  • ஜமால் கஷோக்ஜி கொலை: அமிலத்தில் கரைக்கப்பட்டதா சடலம்?

 இது குறித்து ஞாயிற்று கிழமை வெளியான பேட்டியில் பேசியுள்ள சல்மான், ''சௌதி அரேபியாவின் தலைவராக இந்த விவாகரத்தில் நான் முழுப்பொறுப்பேற்கிறேன். குறிப்பாக சௌதி அரசுக்காக வேலைபார்க்கும் சில தனி நபர்கள் இந்த  கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் பொறுப்பேற்கிறேன்'' என்றார்.

ஆனால் கஷோக்ஜியை கொலை செய்ய  உத்தரவிட்டதாகவோ அல்லது கஷோக்ஜி கொலை செய்யப்படுவது குறித்து  ஏற்கனவே தனக்கு தெரியும் என கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் தெரிவித்தார். 

சௌதி அரசு இந்த கஷோக்ஜி கொலை விவகாரம் குறித்து 11 பேரை சிறையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

’இரான் மீது நடவடிக்கை வேண்டும்’