கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்சாரத் தடை - KinniyaNews
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (09) காலை 8.50 மணியளவில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, விமான நிலையத்தினுள் இயங்கும் குடிவரவு குடியகல்வு திணைக்கள மற்றும் சுங்க நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதேபோல், விமான நிலையத்தின் A/C அமைப்பு மற்றும் விமான நிலைய தொலைபேசி வலையமைப்பும் முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக விமான பயணிகள் கடும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
விமான நிலையத்தினுள் நிறுவப்பட்டுள்ள தானியங்கி ஜெனரேட்டர் அமைப்பு இயங்காததன் காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் காலை 9.20 மணியளவில் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக வீதியிலும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.