கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இடையில் கலந்துரையாடல் - KinniyaNews.com
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகிறது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் இன்று (06) முற்பகல் 10.00 மணியளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமானதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்குடன் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெறும் நான்காம் கட்ட கலந்துரையாடல் இதுவாகும்.
இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை (09) மாவட்ட செயலாளர்களை கலந்துரையாடல் ஒன்றிற்காக அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.