பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அதிகாரத்தை வழங்க முடியாது
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ஐக்கிய தேசியக் கட்சி புதிய அரசாங்கத்திற்கு ஆட்சியமைக்க சந்தர்ப்பம் வழங்கும் ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய நான்கரை வருடங்கள் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது ஆகவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்க முடியாது என கூறினார்.
எனினும் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு புதிய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமைச்சர் வஜிர அபேர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.