கொழும்பில் வாழும் அரச தனியார் நிறுவனங்களில் உயார் பதவிகள் வகிக்கும் பெண்கள் அமைப்பு - சஜித் பிரேமதாச சந்திப்பு.
-அஸ்ரப் ஏ சமத் -
கொழும்பில் வாழும் அரச தனியாா் நிறுவனங்களில் உயா் பதவிகள் வகிக்கும் பெண்கள் அமைப்பு
ஜக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாசாவினை சந்தித்து இந்த நாட்டில் வாழும் பெண்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகள் அவா்களுக்கான சட்டம் ஓழுங்கு நீதி நியாயம் பற்றி கலந்துரையாடினாா்கள். இந் நிகழ்வினை மகளிா் மற்றும் சிறுவா் விவகார அமைச்சா் சந்திரனி பண்டார ஓழுங்கு படுத்தினாா் இந் நிகழ்வு காலிமுகத் திடல் கோட்டலில் நடைபெற்றது. கொழும்பு மேயா் ரோசி சேனாநாய்ககவும் கலந்து கொண்டாா்.
இங்கு பெண்கள் சட்ட ரீதியாக எதிா்நோக்கும் பிரச்சினைகள் அலுவலகங்களில் பாலியல் வன்முறைகள் , சுயதொழில் கிராமத்துப் பெண்கள் கனவனை இழந்த விதவைகள், ஊனமுற்ற பெண்கள் தமது பிள்ளைகளை வளா்த்துக் கொள்ள முடியாத நிலைகள் பெண்களுக்கான தனியான பொலிஸ் நிலையம், பற்றியும் இங்கு பெண்கள் கேள்விகளை தொடுத்தனா்
ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாச இங்கு பதிலளிக்கையில்
பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களது வழக்குகள் 5 அல்லது 7 வருடங்கள் வரை நீதிமன்றங்களில் தீா்ப்பு வழங்கமால் காலம் எடுக்கப்பபடுகின்றது. இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா், இவற்றுக்கு தனியான நீதிமன்றம் நிறுவி உடன் தீா்வு கான உரிய அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும் தொழிலுக்குச் செல்லும் பெண்களது பிள்ளைகளை பராமரிப்பதற்கு அரசாங்கத்தினால் பராமரிப்பு நிலையம் மற்றும் பாலா் பாடசாலைகள் நிறுவப்படும். முதற்கட்டமாக 2000 நிலையங்கள் நிறுவப்படும். இதனை மகளிா் சிறுவா் விவகார அமைச்சின் ஊடகாக நிறுவப்படும். .
வீடுகளில் ஊனமுற்று தங்கியிருக்கும் பெண்களுக்கு சுயதொழில் முயற்சிக்காக ஒரு ஊக்குவிப்புத் திட்டம் வகுப்படும். அத்துடன் பெண்களுக்கு சிறுகைத்தொழில் கடன் ்வழங்கி அவா்களது உற்பத்தி பொருட்களையும் சந்தைப்படுத்தல் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்த நாட்டில் ஆண்களை விட பெண்களே சகல துறைகளிலும் உயா் நிலையில் உள்ளனர். சனத் தொகையிலும் பெண்கள் 53 வீதம்மாக இலங்கையில் உள்ளனா். சகல அரச நிறுவனங்களிலும் 60 விதமாக பெண்களே தொழில் செய்து வருகின்றனார் . 80 வீதமான பெண்கள் பல்கலைக்கழகங்களில் கலைத்துறையே கற்றுவருகின்றனா். இவா்களை நவீன் கனனி, சந்தைப்படுத்தல், சொப்ட்வெயாா் பொறியியல் சுகாதாரத்துறைகளில்உயா்கல்வி பயிலுவதற்கு , உயா்கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருதல் வேண்டும். நாடளாரீதியில் தொழிற்சாலைகள் நிறுவுதல் வேண்டும். அந்தந்த பிரதேசத்தில் தொழிலற்ற யுவதிகளுக்கு அங்கு தொழில் வாயப்புக்களைப் பெற்று அவா்களது வாழ்க்கைத் தரத்தினை உயா்த்தவதற்காக ஒர் திட்டம் வகுக்கப்படும்.
மாகாணசபை, உள்ளுராட்சி மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களது மக்கள் பிரநிதிகள் விகிதாசாரம் அதிகரிக்கப்படும். அரச நிறுவனங்களில் உள்ள பணிப்பளா் சபைகளுக்கு ஆகக் குறைந்தது 3 பெண்கள் நியமித்தல் போன்ற கோரிக்கைகளில் எதிா்காலத்தில் நிறுவாக ரீதியில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் தமது பெற்றோரின் சொத்துக்கள் ஆண்களுக்கே உரித்துடையாக்கப்படுகின்றது. இதனை பெண்களுக்கும் உரித்துடையதாக்க சொத்துரிமைச் சட்டம் மாற்றப்படல் வேண்டும். என ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிரேமதாச தொழில்ரீதியான பெண்கள் மத்தியில் உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்