ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 7 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களை திரட்டி சஜித் பிரேமதாசவின் கரங்களை பலப்படுத்தும் முனைப்பில் சந்திரிக்கா
அண்மையில் குளியாப்பிட்டிய பகுதியில் முஸ்லிம்களுக்கு விரோதமாக நடந்த இனவாத வன்முறைக்கு தலைமை தாங்கிய காடையர்களை ஜனாதிபதியின் ஆசீர்வாதம் பெற்று ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொது செயலாளரான தயாசிரி போலீஸ் பிடியிலிருந்து காப்பாற்றி, முஸ்லிம்களின் கண்டனத்துக்கு ஆளானது யாவரும் அறிந்ததே...
அதே இனவாதி தயாசிரி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 அமைப்பாளர்களோடு மொட்டு கட்சி வேட்பாளரான கோட்டபாயவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்...ஆனால்
அதே கட்சியின் சுமார் 81 தொகுதி அமைப்பாளர்கள், 3000 வேட்பாளர்கள், 15 ஆயிரம் கட்சி ஆதரவாளர்கள் சகிதம் எதிர்வரும் நவ.5ஆம் திகதி சந்திரிக்கா-குமார் வெல்கம தலைமையில் சுகததாச உள்ளரங்கத்தில் ஒன்று கூடவுள்ளனர்...இவர்களின் நோக்கம் ஏழு இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களை சஜித் அணிக்கு திரட்டுவதாகும்...
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இணைவால் மொட்டு கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று கைவார் அடித்துக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ அணியானது நவ.5ஆம் திகதி சந்திரிக்காவின் மாநாட்டால் நிலை குலையப்போவது திண்ணம்...