தேசிய தலைவர் றிசாத் பதியுதீனுக்கு புல்மோட்டையில் அமோக வரவேற்பு..!!
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் புல்மோட்டையில் இன்று இடம் பெற்றது.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் விசேட வழிகாட்டுதலின் கீழும் கட்சியின் புல்மோட்டை மத்திய குழுவின் தலைமையிலும் முன்னெடுக்கப்பட்ட இக் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களுக்கு புல்மோட்டை மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இதில் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள்,மத்திய குழு மற்றும் வட்டார வேட்பாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்..