தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு - KinniyaNews.com

தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு - KinniyaNews.com

மட்டக்களப்பு கள்ளியங்காடு பகுதியில் உள்ள மரமொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கள்ளியங்காடு றொஸோரியன் வீதியில் உள்ள அருனோதயம் பாடசாலைக்கு பின்புறமாகவுள்ள மரமொன்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் அப்பகுதியை சேர்ந்த சிவலிங்கம் நிசாந்தன் (21வயது )என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளம் குடும்பஸ்தரின் மரணம் தொடர்பான மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)