சஜித் பிரேமதாச 53% - 54% வாக்குகளுடன் முன்னனியில் உள்ளார்.!!!

சஜித் பிரேமதாச 53% - 54% வாக்குகளுடன் முன்னனியில் உள்ளார்.!!!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தோல்வியை தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக முனைப்புடன் செயற்படப் போவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

கடந்த 2014 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் இதே போன்ற வெற்றியை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்த போதும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வியை சந்திக்க அவருக்கு நேர்ந்தது.

 

மேலும் எல்பிட்டிய பிரதேச சபை என்பது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமில்லாத ஒரு தேர்தல் தொகுதியாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.