ஜக்கிய நாடுகள் சமாதானப்படையில் இணையும் வாய்ச்சேனை முகம்மது அக்ரம்
Akram-un
ஜக்கிய நாடுகள் சமாதானப்படையில் இணையும் வாய்ச்சேனை முகம்மது அக்ரம் இன்று அதிகாரபூர்வமாக பயணமானார்.
இலங்கை விமானப்படையில் இயந்திரவியலாளராக பணி புரிந்து வரும் வாய்ச்சேனையைச் சேர்ந்த அப்புல் கதிர் முகம்மது அக்ரம் ஜக்கிய நாடுகள் சமாதானப்படையில் இயந்திரவியலாளர்களில் ஒருவராக இணைந்து கொண்டுள்ளார்.
மத்திய ஆப்ரிக்க குடியரசு செல்லவுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த குற்றவியல் நிலையப்பதத்தில் பணியக (MINUSCA) சமாதானப்படையில் இலங்கை விமானப்படையின் 11வது (Aviation Unit) ஹெலிகாப்டர் பிரிவில் இருந்து பெண் அதிகாரிகள் உட்பட 22 அதிகாரிகளும் ஐந்து பெண் வீராங்கனைகள் உட்பட 88 விமானப்படை வீரர்கள் இணைந்து கொள்ளின்றனர்.
இக்குழுவில் இணைந்து கொள்ளும் முகம்மது அக்ரம் தனது குடும்பத்துடன் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக மத்திய ஆப்ரிக்க குடியரசு நோக்கிப் பயணமானார்.
வாய்ச்சேனை மண்ணிலிருந்து ஜக்கிய நாடுகள் சமாதானப்படையில் இணையும் இரண்டாவது நபரான முகம்மது அக்ரம், மென்மேலும் உயர் பதவிகளைப்பெற வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
