3 இலட்சம் வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை - KinniyaNews

3 இலட்சம் வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை - KinniyaNews

வாக்காளர்களில் 3 இலட்சம் பேருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

ஆட்பதிவு திணைக்களம் இது தொடர்பாக தெரிவிக்கையில் விண்ணப்பித்தவர்கள் கிராம உத்தியோகத்தர் மூலம் இந்த அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். தேசிய அடையாள அட்டைகளை விண்ணப்பித்த நபர்களுக்கு மாத்திரம் இதன் மூலம் வாக்களிப்பதற்கு முடியும்.

இதற்கு அமைவாக தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. விசேட பாதுகாப்பு காகிதாதிகள் மூலம் அச்சிடப்பட்டுள்ள இந்த அடையாள அட்டையில் தேசிய அடையாள அட்டைகளுக்கு உள்ளடக்கப்படும் அனைத்து தகவல்களும் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் கையெழுத்துடன் இது விநியோகிக்கப்படவுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)