பகுத்தறிவு உள்ளவர்களின் ஒரே ஒரு தெரிவு சஜித் பிரேமதாசவே - KinniyaNews
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதியாக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தெரிவுச்செய்தே பகுத்தறிவு மிக்கவர்களின் ஒரே ஒரு தெரிவாக அமைய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை அக்குரல பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எமக்கு முன்னாள் ஒரு போராட்டம் காணப்படுகின்றது. அதில் சஜித் பிரேமதாச களமிறங்கியுள்ளதால் எம்மால் அதில் இலகுவாக வெற்றி பெற முடியும். அது பெருமைக்குரிய விடயமாகும்.
சஜித் பிரேமதாசவே எமக்குள்ள மிகப்பெரிய பலம். அவர் முன்வரவில்லை என்றால் எமக்கு இந்த தேர்தல் பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுக்க முடியாமல் போயிருக்கும்.
அவ்வாறு அவர் முன்னிலையாகாவிடின் கட்சியின் புதியவர்கள் மற்றும் சிரேஸ்ட தலைவர்கள் எவரும் ஒன்றிணைந்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள்.
தற்போது எவரும் எந்தவித கேள்விகளையும் கேட்பதில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்கள் எவரும் பிரச்சினைகளை வெளியில் சொல்வதில்லை. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சஜித்தை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறு அவரை வெற்றிபெற செய்து புதிய பயணம் ஒன்றை செல்வோம் என அவர்கள் கூறுகின்றனர்´ என்றார்.