பங்காளிக் கட்சிகள் புதிய ஜனநாயக முன்னணியுடன் கைச்சாத்திடும் நிகழ்வு.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவுடன் இணைந்து கூட்டினைந்ததான ஏனைய கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்கள்,அமைப்புக்கள் கைச்சாத்திட்டன.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் இன்று கொழும்பு தாஜ் சமுத்திராவில் இடம் பெற்ற நிகழ்வின் போது கைச்சாத்திட்டார்.
இதன் போது 40 அரசியல் கட்சிகள் மற்றும் 18 சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கைச்சாத்திட்டுள்ளன.
இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்..