தம்புள்ளையில் வெங்காய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும் - KinniyaNews
தம்புள்ளையை நாட்டிற்கு வெங்காயம் விநியோகிக்கும் பிரதான பிரதேசமாக மாற்றுவதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று (08) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
நெல் உள்ளிட்ட மற்றைய பயிர்களுக்கும் மற்றும் வெங்காயத்திற்கும் உத்தரவாத விலையினை பெற்றுக் கொடுத்து வெங்காய விவசாயிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அதேபோல், விவசாயிகளை விவசாய பொருளாதாரத்துடன் மாத்திரம் நிறுத்திவிடாமல் விவசாயிகளை ஒரு தொழில்முனைவோராக மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு விவசாயிகளின் பொருளாதாரம் தொடர்பில் எவ்வித கவலையும் இன்றி வெங்காயம் போன்ற பயிர்களை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ததன் ஊடாக உள்நாட்டு விவசாயிகள் கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.