83 கிலோ கேரள கஞ்சாவுடன் நபரொருர் கைது - KinniyaNews
சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் வைத்து 83 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையால் சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதிகள் சில கண்காணிக்கப்பட்டுள்ளன.
பின்னர் அவற்றை சோதனைக்கு உட்படுத்திய போது குறித்த கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பலாலி பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.