கண்டி விரைவு புகையிரத பெட்டி ஒன்றில் வெடிமருந்துகள் கண்டெடுப்பு

கண்டி விரைவு புகையிரத பெட்டி ஒன்றில் வெடிமருந்துகள் கண்டெடுப்பு

புகையிரத பெட்டி ஒன்றில் வெடிமருந்துகளுடன் கூடிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது

அதன்படி இன்று காலை 06.30 மணியளவில் மருதானையிலிருந்து பெலியத்தை நோக்கிச் சென்ற புகையிரதம் தனது இலக்கை முடித்துக்கொண்டு பெலியத்த புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது

புகையிரத பெலியத்தவிலிருந்து கண்டிக்கு விரைவு ரயிலாக பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த நிலையில், புகையிரதத்தை வழமையாக பரிசோதிக்கும் போது, ​​பெட்டி ஒன்றில் இருக்கைக்கு அடியில் கறுப்புப் பையொன்றை ரயில்வே ஊழியர் ஒருவர் அவதானித்தார்.

இது தொடர்பில் பெலியத்த பிரதான நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது துப்பாக்கியின் மகசீன் ஒன்றும் மற்றுமொரு தோட்டா ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெலியத்தவிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் புகையிரதம் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .