பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது : சட்டத்தரணி பஹ்மி

பாராளுமன்றத்தை உடனடியாக கலைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது : சட்டத்தரணி  பஹ்மி

19 வது அரசியலமைப்பு திருத்தத்தின் விளைவை ரணிலே அனுபவிக்கின்றனர்.

1-ஒரு வருடம் தொடங்கிய SLPP கட்சியை உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெறச் செய்தது

2-56 நாட்கள் அரசாங்கத்தை பறிகொடுத்து நீதிமன்றம் சென்றது

3-சிறுபான்மை வாக்குகள் இல்லாமல் ஜனாதிபதியாகலாம் என்ற வரலாற்றுத் தவறை ஆரம்பித்தது

4-தனது கட்சி மற்றும் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்தும் பொட்டிப்்பாம்பாக பிரதமர் பதவியை மட்டும் வைத்திருப்பது

இந்த நிலையில் ஆயுட்காலம் முடிவதற்குள் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு வழிகளே:

1-பாராளுமன்றம் 4.6 மாதத்தை கடந்திருக்க வேண்டும்.

2-பாராளுமன்ற 2/3 பெரும்பான்மை தீர்மானத்தை கலைக்குமாறு நிறைவேற்றல்.

According to Article 70(1) of the Constitution, there are only two ways in which Parliament can be sooner dissolved.

They are as follows:1. At the expiration of a period of not less than four years and six months from the date appointed for its first meeting.

2. When the Parliament by a resolution passed by not less than two-thirds ofthe whole number of Members (including those not present) requests the President of the Republic to dissolve Parliament.

இந்த நிலையில் இரண்டாவது வழிமுறையே உள்ளது.

ஆகவே இரண்டு கட்சிகளிடம் இருந்தும் பல்வேறு முனைகளில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

UNP:
———-
ரணில் குழு: சட்டப்படி பெரும்பான்மை இருப்பதால் தொடர்ந்து பதவி வகிக்கலாம்.இதற்கு மஹிந்தவிடம் சாதகமான பதில் கிடைத்துள்ளது.பதவி விலகினால் கட்சித் தன்மையையும் விலக வேண்டி வரும்.அது ஆபத்தானது.

சஜித் குழு: உடனடியாக பதவி விலகுவதே ஐனநாயகம்.கட்சியை உடனடியாக சீரமைத்து பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும்.

ஹகீம்& தமிழ் முற்போக்கு கூட்டனி :உடனடியாக பதவி விலகுங்கள்.எங்கள உறுப்பினர்கள் கோதபயா பக்கம் ஓடிவிடுவார்கள்.எங களால் கட்சியையோ,உறுப்பினர்களையோ பாதுகாக்க முடியாது .பாராளுமன்றத்தை கலைத்துவிட ஆதரவு வழங்குங்கள்.அதற்கு பின்னர் ஊருக்கு சென்று தேர்தல் வேளை செய்வார்கள்.

SLPP
———-
மஹிந்த அணி:
ரணில் எஞ்சிய காலத்திற்கு பிரதமராக இருக்கட்டும்.அவரின் கட்சித் தலமையை சஜித்திடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.அப்போதுதான் இனிவரும் தேர்தல்களை இலகுவாக வெற்றிபெறலாம்.

கோதபயா அணி :ரணிலால் ஒன்றும் செய்ய முடியாது.ரணிலை பிரதமராக வைத்து கட்சியை மேலும் பிளவுபடுத்தலாம்.

விமல்/அத்துரலிய/உதய கம்பன்: ரணில் உடனடியாக பதவி விலகி,,ஆட்சியை தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும்.

ஶ்ரீலசுக குழு: பாராளுமன்றத்தை கலைக்க 2/3 பெரும்பான்மைக்கு ஐதேகட்சி ஆதரவு வழங்க வேண்டும்.

இந்த நிலையில் ஐதேகட்சி பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.சஜித் குழுவினர் கட்சியை கைப்பற்றும் முழு முயற்சியில் இறங்கி உள்ளனர்.இதனைத் தடுத்து,தனது பதவியைக்காக்க மஹிந்த உடன் பழைய உறவை நேற்றுடன் மீண்டும் புதுப்புத்துள்ளார்.

அதேநேரம் ராஜித்த,மங்கள,அர்ஜுன மற்றும் உடன் 12 உறுப்பினர்கள் சந்திரிக்கா பக்கம் இணைந்து புதிய கட்சியை ஆரம்பிக்கும் பணியில் தீவிரமாகி உள்ளனர்.

அதேநேரம் SLMC &ACMC&தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 8 நபர்களுடன் உத்தியோகப்பூர்வமான பேச்சுக்கள் இன்றுடன் முடிவடைந்துள்ளது.இதனால் தலமைகள் விரும்பியோ விரும்பாமலோ சரணகதியாக உள்ளது.ஹவுஸ் புள்ளாவதற்குள் தேசிய தலமையும் ஓடவேண்டிய நிர்ப்பந்தம்.

கடந்த முறை நீதிமன்றம்,சட்டம் மற்றும் பெரும்பான்மை இருந்தது.இம்முறை மண்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை.அதிலும் கடந்த காலங்களில் கோதபயா செயலாளராக இருக்கும் போது அடிமைகளாக இருந்தவர்கள்,ஐனாதிபதியான பின்னர் பேய் அரைந்த நிலையில் உள்ளனர்.அதிலும் றிசாத்திற்கு கிடைக்கின்ற சொற்பமான பதில்கூட ஹகீம் காக்காவிற்கு இல்லாதது கடுப்பைக் கூட்டி உள்ளது.

அதேநேரம் அத்தாவுள்ளா,பசீர் ,கருணா மற்றும் ஹிஸ்புள்ளா ,மையோன் முஸ்தபா.அலிசப்ரி ,முஸம்மில்,ஹசனலிஆகியவர்களைத் தாண்டி நாமலிடம் கூட பேச முடியாமல் முஸ்லீம் தலமைகள் கைவிடப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தத் தேர்தலில் 20 வருடங்களாக முஸ்லீம்களை வைத்து வியாபாரம் செய்தவர்களுக்கு நஷ்டம் அதிகமாகும்.இறைவன் தண்டனையை பல உருவங்களில் வழங்குவான்.