கொரோனா வைரஸ் தொற்று! பேருவளை பகுதியில் தனிமையாக்கப்பட்ட கிராமம் 4 hours ago

கொரோனா வைரஸ் தொற்று! பேருவளை பகுதியில் தனிமையாக்கப்பட்ட கிராமம் 4 hours ago

பேருவளை - பன்னல என்ற இடத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த 100 பேர் தனிமைப்பபடுத்தல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பொது மகன் ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அதிகாரிகளிடம் வெளியிடாமல் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் கிரிபட்டியாவத்த - பன்னலையை சேர்ந்த வாகன சாரதியான பொதுமகனே தமக்கு ஏற்பபட்டட குணங்குறிகளை மறைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு நாகொட வைத்தியயசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்தே பன்னல கிராமம் நேற்று பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைவரஸ் தொடர்பில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நான்காவது கிராமம் பன்னல என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புத்தளம் - கடங்குளம், களுத்துறை - அட்டுல்கம, அக்குரனை - கொழும்பகஹாவத்த ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.