போலி நாணய தாள்களை தம்வசம் வைத்திருந்த ஐவர் கைது.!!

போலி நாணய தாள்களை தம்வசம் வைத்திருந்த ஐவர் கைது.!!

ஒரு தொகை போலி நாணய தாள்களை தம்வசம் வைத்திருந்த ஐவர் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு வருகைத்தரும் ஒருவர் இவ்வாறு போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி மதுபான கொள்வனவில் ஈடுபட்டுள்ளார்.

இதனை அவதானித்த கடை உரிமையாளர் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த நபரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 3 பண தாள்கள் கைபற்றப்பட்டுள்ளன.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய போலி நாணயத் தாள்களை அச்சிடும் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டதுடன் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 7 நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொரலஸ்கமுவ, கனேமுல்ல, வீரகெட்டிய, பெல்லம்பல மற்றும் தெஹிவல பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.