வடக்கு, கிழக்கில் நிம்மதியாக வாழ சஜித்தினை ஆதரிப்போம் - KinniyaNews
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நிம்மதியாக வாழ சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஓட்டமாவடி தியாவட்டவான் பிரதேசத்தில் தேர்தல் காரியாலயம் நேற்று இரவு திறந்து வைத்து உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு ஒட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, இணைப்பாளர் ஏ.அக்பர், வட்டாரக் குழு தலைவர் எம்.பாறூக் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தேர்தல் காரியாலயங்களை திறந்து வைக்கின்றார்.
(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)