கொரோனா தொற்றாளார்கள் உடல் தகனம்! இலங்கைக்கு விசேட கடிதம் அனுப்பிய டுபாய் அரசாங்கம்.
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களை எரிப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் குறித்து கொழும்பிலுள்ள டுபாய் அரசாங்கத்தின் தூதரகம் விசேட கடிதமொன்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸினால் மரணிப்பவர்களது சடலங்கள் எரிப்பதா அல்லது புதைப்பதா என்கிற சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான டுபாய் அரசாங்கம், இவ்வாறு உயிரிழப்பவர்களை தகனம் செய்வதற்கு அதிரடி முடிவை எடுத்தது.
இதுகுறித்து இலங்கை அரசாங்கத்திற்கு கொழும்பிலுள்ள டுபாய் தூதரகம் விளக்கம் அளித்து விசேட கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.