மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை - KinniyaNews.com

மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை - KinniyaNews.com

2012 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் வீடொன்றின் அறையினுள் 35 வயது தனது மனைவியையும் 3 வயது மகனையும மற்றும் ஒரு வயதுடைய குழந்தை ஒன்றையும் எரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிக்கு கொழும்பு லே் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராய்ச்சி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த நீதிபதி, குறித்த சம்பவத்தின் பின்னர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றிற்கு பிரதிவாதி பெற்றுக் கொடுத்த வாக்குமூலத்தில் மூலம் இந்த குற்றச் செயலை புரிந்துள்ளதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக அரச சட்ட வைத்திய அதிகாரி பெற்றுக் கொடுத்த சாட்சிகளுக்கு அமைய உயிரிழந்தவர்கள் மூவரும் பிரதிவாதியால் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும, அரச சட்ட வைத்திய அதிகாரி பெற்றுக் கொடுத்த சாட்சிகளில், உயிரிழந்த மூவரும் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,

முன்வைக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த முக்கொலை பிரதிவாதியால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி விகும் கலுஆராய்ச்சி அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.