ஐக்கிய தேசிய கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெஸா விதானகே தெரிவித்துள்ளார்.
கட்சியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க வேண்டுமானால் ரணில் விக்ரமசிங்க புதிய ஒருவருக்கு தலைமைத்துவ பதவியை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´ஐக்கிய தேசியக் கட்சி பூரண மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படாவிட்டால் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவின் கருத்துக்களை கேட்காவிட்டால் அதேபோல் சஜித் பிரேமதாசவிற்கு தலைமைத்துவத்தை கையளிக்காவிட்டால் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் இரக்குவானை தொகுதி அமைப்பாளர் பதவியில் விலகுவேன்.
ஆகவே, ரணில் விக்ரமசிங்க கட்சி ஆதரவாளர்களின் கருத்தை புரிந்து கொண்டு கட்சியை படுகுழியில் இருந்து காப்பாற்ற வேண்டும்´ என தெரிவித்துள்ளார்.