கோட்டா இன்னும் டிக்கட் 'புக்' பண்ணவில்லை: மஹிந்த - KinniyaNews

கோட்டா இன்னும் டிக்கட் 'புக்' பண்ணவில்லை: மஹிந்த - KinniyaNews

நவம்பர் 17ம் திகதி அமெரிக்கா செல்வதற்கு தனது சகோதரனும் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபே ராஜபக்ச விமான பயணச் சீட்டு கொள்வனவு செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் உலவும் தகவல் பொய்யானது என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியானதும் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியது போன்று பெரமுன வேட்பாளர் கோட்டாபே ராஜபக்சவும் நவம்பர் 17 நாட்டை விட்டு செல்லத் தயாராகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இது குறித்தே இன்று பதுளையில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து மஹிந்த ராஜபக்ச மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.