கிண்ணியா தள வைத்தியசாலையில் நவீன முறையில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

basehospital

கிண்ணியா தள வைத்தியசாலையில் நவீன முறையில் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

கிண்ணியா தள வைத்தியசாலையில் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Total Laparoscopic Hysterectomy (TLH) எனப்படும் கருப்பை அகற்றும் சத்திர சிகிச்சை கடந்த வாரம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இம்முறை வயிற்றில் பெரிய வெட்டுக் காயங்கள் ஏற்படுத்தாமல், சிறிய துவாரங்கள் மூலம் கேமரா உதவியுடன் கருப்பை அகற்றப்படும் நவீன அறுவை சிகிச்சை முறையாகும். இதனால் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வலி குறைவாக இருப்பதுடன், விரைவாக குணமடையும் வாய்ப்பும் கிடைக்கிறது. மேலும், மருத்துவமனையில் தங்கும் நாட்களும் குறைவாக இருப்பதால் நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.

இந்த சத்திர சிகிச்சை கிண்ணியா தள வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் நிபுணர் VOG டாக்டர் அபாஸ் மஹ்தூம் (Dr. Afas Mahdoom) அவர்களின் தலைமையில், இதர மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான நவீன அறுவை சிகிச்சைகள் கிண்ணியா தள வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுவது அந்தப் பகுதி மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் கிடைப்பதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் கிண்ணியா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள் அருகிலேயே கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.