கல்விக்கு கை கொடுத்தோர் - அஸ் ஸக்கரியா வித்தியாலயம்

கல்விக்கு கை கொடுத்தோர் -  அஸ் ஸக்கரியா வித்தியாலயம்

கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள மாகாமாறு அஸ் ஸக்கரியா வித்தியாலயம் தனி நபர் ஒருவரால் அப்பகுதி மக்களின் கல்வி நலனுக்காக 2004.01.01 இல் உருவாக்கப் பட்டது.

கிண்ணியா மைமூன் நகை மாளிகை உரிமையாளராக இருந்த மர்ஹூம் ஆர்.எம்.ஸக்கரியா அவர்கள் தான் இப்பாடசாலையின் ஸ்தாபகர்.

இப்பகுதி மாணவர்கள் தமது கல்வித் தேவைக்காக நீண்ட தூரம் நடந்து வருவதை கண்டு வருத்தப் பட்டு அதற்கு தீர்வு காண்பதற்காக தனது சொந்த செலவில் காணி வாங்கி, ஆரம்ப கட்டடமும் வழங்கி பாடசாலை ஆரம்பிக்க இவர் உதவினார். இதனால் அவரது பெயரே பாடசாலைக்கு சூட்டப் பட்டுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் இப்பகுதி மக்கள் இப்பாடசாலை தமது பகுதிக்கு கிடைத்ததை பெரும் பேறாக கருதிகின்றனர்.

இப்பாடசாலையின் ஸ்தாபக அதிபர். எம்.சி.எம்.சமீம். இவரும் சக்கரியா ஹாஜியாரோடு இணைந்து பாடசாலை வளர்ச்சியில் பங்காற்றினார்.

இப்போது பாடசாலை அதிபர் ரபீக். சக்கரியா ஹாஜியாரின் பிள்ளைகள் இவரோடு தொடர்புகளை ஏற்படுத்தி இன்றும் பாடசாலை விடயத்தில் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கல்விக்கு கை கொடுத்த இவரை ஞாபகப் படுத்துவோம். பிரார்த்தனைகளில் சேர்த்துக் கொள்வோம்

அல்லாஹும்மஹ் பிர்லஹு வர்ஹம்ஹு

Muhammed_Mussil