முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரத்வத்தவின் மனைவியை நவம்பர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் மிரிஹானவில் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் நம்பர் பிளேட் இல்லாத வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வாரம் மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள், சொத்தில் வாகனம் இருப்பதைக் கண்டுபிடித்த பின்னரே, வீடு ரத்வத்தேவின் மனைவிக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அண்மையில் கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது ஒருங்கிணைப்புச் செயலாளர், தனக்குத் தெரிவிக்காமல் காரை சொத்திற்குக் கொண்டு வந்ததாகவும், வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும் லொஹான் ரத்வத்த விசாரணையின் போது கூறியிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்டோபர் 31ஆம் தேதி லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டு நவம்பர் 07ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.