ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு?அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட TNA - KinniyaNews
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு ஏதுவான சூழலை தமிழ் மக்கள் உள்ளிட்ட சகல மக்களுக்கும் வழங்க தவறியமை பிரதான தவறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்த தீர்மானம் தொடர்பில் தெளிவுபடுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தம் இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையிலேயே அவர் குறித்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மஹிந்த அரசாங்கம் 17 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நீக்கி 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியமை, அரசியலமைப்பு பேரவையை இல்லாதொழித்தமை போன்றவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இனபிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் மஹிந்த அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய செயற்பட்டிருந்த போதும் அதனை அவர்கள் உதாசீனப்படுத்தியதாகவும் சம்பந்தன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே இவற்றின் ஊடாக அவர்களின் எதேச்சதிகாரத்தையும் தான்தோன்றித்தனத்தையும், ஜனநாயகத்தின் மீதான பற்றுறுதி தொடர்பிலும் ஒரு கணிப்பை மேற்கொள்ள முடிவதாகவும் சம்பந்தம் கூறியுள்ளார்.
அதேபோல் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரோடு ஆட்சியதிகாரத்திலிருந்த ஏனையவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் கவலையளிப்பவையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் சஜித் பிரேமதாச ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சரவாதிகாரப் போக்கிற்கு அப்பாட்பட்டவராகவும், சட்டவாக்கத்துறை பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீது பற்றுறுதி பூண்டவராகவும் உள்ளார் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்க கூடியவராகவும், மனித உரிமைகள் மீது பற்றுறுதி கொண்டவராகவும், நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை மிகுந்த ஒருவர் எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
அத்துடன் அவர் சகல மதங்களையும் மதித்து அவைகளுக்கு சம உரிமையை வழங்கும் ஒருவர் எனவும் தெரிவித்துள்ள சம்பந்தன், இவற்றை கருத்தில் கொண்டே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்தாகவும் கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் கொள்கை பிரகடனத்திலும், நிகழ்ச்சித் திட்டங்களிலும் நம்பிக்கை வைத்து அவரை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனவே வடக்கு, கிழக்கு தமிழ் தமிழ் மக்கள் அன்னச் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெ ளியிட்ட அறிக்கை வருமாறு,