தேர்தலின் பின்னர் நிபந்தனை அற்ற ஆதரவு..!!

Sri Lanka

தேர்தலின் பின்னர்  நிபந்தனை அற்ற ஆதரவு..!!

TNA=2 Cabinet
ACMC+SLMC+TMPF=One cabinet each-No deputy +No National List

One secretary
One Coordinator
One media secretary

Maximum 4 Staff for ministry

Director /Ambassador/Chairman= No politician

No cabinet for
Ravi
Malik SAMARAWEERA
Sagala Ratnayaka

National list recommendation:

Imthiyas Bakeer
Tisa
1xMaharajha group
2xProfessors

சஜித்தின் கடுமையான எதிர்காலத் திட்டத்தாலும் ,அர்த்தமுள்ள கொள்கையாலும் நிர்க்கதியான சிறுபான்மை தலமைகள் யாதகம்.கட்சி வளர்க்கவும் ,வயிறு நிரப்பவும் அமைச்சுப் பதவிகள் இன்றுவரை சமூகத்தின் பெயரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது .

சஜித்தின் கடுமையான கெடுபிடியால் நிபந்தனையற்ற ஆதரவு என்ற பூத்த்தை கிளப்பி உள்ளனர்.நாட்டில் மஹிந்த ஆரம்பித்ததைவிட அதிகமாக முஸ்லீம்களுக்கு எதிராக சதிசெய்த நல்லாட்சி என்ற இரண்டு (
UNP+SLFP)களவானிகளிடமும் சரண்டைந்துள்ளனரா?சாணாக்கியமாக ஒட்டி உள்ளனரா?

மஹிந்த அணிக்கு சிறுபான்மை வாக்குகளுக்காக எந்த விலையும் கொடுக்க தயாராக உள்ளனர்.இந்த நிலை வரலாற்றில் முஸ்லீம்களிக்கான பாரிய அதிஷ்டமாகும்.இப்போதுதான் மர்ஹூம் அஷ்ரபின் சாணாக்கியம்்தேவை.ஆனால் TNA ஒட்டிக் கொண்டதால் தாங்களும் நக்கியாவது கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு சமூகத்தின் பலத்தை அர்த்தமற்றதாக்கிவிட்டனர்.

TNAவையும் முஸ்லிம் கட்சிகளையும் வடகிழக்கில் மோதவிட்டு,தனது ஆட்சியை சிங்களப் பேரினவாத எதிர்ப்பில் இருந்து சாதுரியமாக காய்நகர்த்த சிறுபான்மை கட்சிகள் துணைபோக உள்ளது.

TNA அடுத்த அரசில் முக்கிய பங்காளியாக இணைவதற்கு முடிவு செய்துள்ளது.இவர்கள் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கலாம்.ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிராக எந்த அரசாங்கம் செயற்பட்டாலும் இந்தியா ,ஜநா சபை மற்றும் மேலைத்தேச ஆதரவுடன் கடிவாளம் போடுவார்கள்.

முஸ்லீம் கட்சிகளைப் பொறுத்தவரை அமைச்சை இராஜினாமா செய்வதை விட எந்தவித உச்ச கட்ட சத்தத்தையும் எழுப்ப முடியாது.

இலங்கையில் அண்மைக்கால பிரச்சனையில் இந்திய RSS முக்கிய பங்கு இருப்பதை இராணுவ புலனாய்வு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் எதிர்கால அரசாங்கத்தில் TNAவின் நெருக்கமான கூட்டு ஆபத்தானது.சிங்களப் பேரினவாத்தால் அனுபவித்த அதைவிட அதிகமாக முஸ்லீம்கள் வடகிழக்கில் அனுபவிக்க தயாராக வேண்டும் என இந்திய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது .

முகநூலில் முக்காடு போட்டு நிபந்தனைநற்ற ஆதரவை சாதனையாக எழுதுகின்றனர்.இப்படி ஒவ்வொரு தேர்தல்களிலும் சமூகத்தின் கண்களை மூடவைத்து இறுதியில் ஏமாற்றத்தில் முடிந்ததே வரலாறு.

நிபந்தனையுடன் ஆதரவு:

இந்த சொற்பிரயோகம் பலருக்கு விமர்சனமாக உள்ளது.நடமுறையில் எந்த சிங்கள தலமையாலும் சிறுபான்மையினருக்கு எழுத்துமூலம் உத்தரவாதம் வழங்க முடியாது.காரணம் சிங்களத் தலமைகள் வெற்றியை பெரும்பான்மை சிங்கள வாக்கு வங்கியை நம்பியே உள்ளது.இருந்தும் முஸ்லீம்களின் மதம்சார்ந்த,அபிவிருத்தி,மீள்குடியேற்றம் மற்றும் காணிப் பிரச்சனை பொதுவான உடன்பாட்டுக்கு தேவையாக உள்ளது.

இத்தகைய சமூகம்சார்ந்த பிரச்சனைகளை கல்விமான்கள் மற்றும் சமயத் தலைவர்களை இருபக்கமும் ஒரே மேடைக்கு அழைத்து சஜித் தலமையில் கலந்துரையாடலாம். நமது தலமைகள் இத்தகைய ஆரம்ப கலந்துரையாடல்கள் மூலம் பொதுவான உடன்படாடுகளை காணலாம்.இது பல்வேறு முனைகளிலும் இருந்து தமது இருப்பு மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தலாக நாட்களை நகர்த்தும் நமது சமூகத்திற்கு ஆறுதலை வழங்கலாம்.

கடந்தகாலங்களில் சந்திரிக்கா மற்றும் மைதிரி மீது அதீத நம்பிக்கை வைத்தது.ஒப்பீட்டு ரீதியாக முஸ்லீம்கள் அதிகமான வாக்குகளை வழங்கினர்.ஆனால் முஸ்லீம் சமூகம் இன்று வரை ஏமாற்றமே கண்டது.அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை அனுபவித்ததைவிட சமூகம் அதிகமாக இழந்தது .மர்ஹூம் அஷ்ரபின் பின்னர் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து ஏமாற்றமே காண்கிறது.

இந்த நிலையில் NPP முஸ்லீம் சமூகத்தின் வாக்கில் அதிக நம்பிக்கையுடன் உள்ளது.இரண்டு தேசியக் கட்சிகள் மற்றும் முஸ்லீம் தலமைகள் மீது நம்பிக்கை இழந்த முஸ்லிம் வாக்குகளை குறிவைத்துள்ளது.இருந்தும் இம்முறை கணிமானளவு வாக்குகளை JVP பெறலாம். கடந்த உள்ளூராட்சித்்தேர்தலில் 5.75% வாக்குகளைப் பெற்ற JVP இம்முறை பலமாக NPPமூலமாக 10% வாக்குகளைப் பெற்றால் சிக்கலான சூழ்நிலை உருவாகலாம்.

1981ம் ஆண்டு 15ம் இலக்க கட்டளைச் சட்டத்தின் படி எவரும் 50%மான வாக்குகளைப் பெறாதவிடத்தில் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு எண்ணப்படும்.இலங்கை வரலாற்றில் இத்தகைய சூழ்நிலை இந்தமுறை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி நேரத்தில் கோதபயா மற்றும் SLFP கட்சி அதிர்ச்சியான நகர்வுகளை கையாளலாம்.தேர்தல்கள் முடிவுகள் இறுதிநேரம் வரை பல்வேறு மாறுதல் களை வழங்கும் .

இந்த நிலையில் முஸ்லீம்கள் தனியே ஒருபக்கம் நிற்பதோ அல்லது ஒட்டுமொத்த எதிர்ப்பை ஒருவருக்கு மட்டும் காட்டுவதோ நாகரீகமாகமோ,ஆரோக்கியமோ இல்லை.ஏனெனில் எந்த தலமை ஆட்சிக்கு வந்தாலும் அனுசரித்துப் போகவேண்டிய நிர்ப்பந்தம் சிறுபான்மை சமூகத்திற்கு உள்ளது,. இதனை மறந்து நமது கண்மூடித்தனமான கருத்துக்களை வெளியிடுவது ஆபத்தானது.

எந்த சிங்களத் தலமை வெற்றி பெற்றாலும் நமது சமூகமும் வெற்றியாளராக பங்காளராக வேண்டும்.இதுதான் சாணாக்கியம்.

அன்று பேரம்பேசி சாதனை படைத்த நாங்கள் ,இன்று பேய் அடித்த சமுகமாக மாறி உள்ளோம்.

மாறாக நாம் எந்த தலமை தோற்றாலும் .வெற்றிபெற்றாலும் இருவரிடமும் நாம் தோல்வி காண்கிறோம்.

M.B.M Fahmy Mohamed 

LLB, Solicitors, Advisor for Foreign and Political issue(Asian Region)