வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் ஹெலிகொப்டரில் எடுத்து செல்லப்படும் - KinniyaNews
யாழ். மாவட்டத்தின் தீவகங்களுக்கான வாக்குப் பெட்டிகள் தீவிர பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுந்தீவிக்கான வாக்குப் பெட்டிகள் கடற்படையினரின் பாதுகாப்புடன் அதிவேக படகில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
நாளை வாக்களிப்பு முடிந்தவுடன் நெடுந்தீவில் இருந்து வாக்குப் பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் ஹெலிகொப்டர் மூலம் யாழ். மத்திய கல்லூரிக்கு எடுத்து செல்லப்படும் என்று தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-