முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது.
எம்.ஆர்.எம்.வஸீம்
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க
முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமுகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்போது அந்த அரசாங்கம் எமது சமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியது. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த அரசாங்கத்தில் இருந்து விலகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று அவரது இல்லத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.