இளைஞர் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.!

இளைஞர் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.!

இப்போது வரும் சிறந்த தொழில்நுடபங்கள் அனைத்தும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக ஸ்மார்ட்போன், வாட்ச், போன்ற பல்வேறு சாதனங்கள் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் மகிவும் அதிகமாக பயன்படுகிறது. பின் வரும் காலங்களில் தொழில்நுட்ப முன்னேற்றம் அதிக நன்மையை தரும் என எதரிபார்க்கப்படுகிறது.

தற்சமயம் ஆப்பிள் வாட்ச் ஒன்று அமெரிக்காவில் உள்ள இளைஞர் உயிரை காப்பாற்றியுள்ளது, மேலும் ஆப்பிள் நிறுவனம் இப்போது சிறந்த மென்பொருள் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.

ஜேம்ஸ் கிரீன்
28வயது இளைஞர் ஜேம்ஸ் கிரீன் என்பவர் அமெரிக்காவை சார்ந்தவர், இவர் அமெரிக்காவில் உள்ள பிரபலமான பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

நெஞ்சு வலி
ஜேம்ஸ் கிரீனுக்கு அவ்வப்போது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தது. இவர் மருந்துவமனைக்கு சென்று பல பரிசோதனைகள் செய்துள்ளார், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆப்பிள் வாட்ச்
சில வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் கிரீன் ஆப்பிள் வாட்ச்ஒஎஸ் 4 மாடலை ஒன்றை தனது பொழுதுபோக்கிற்காக வாங்கியுள்ளார், இந்த வாட்ச் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும் இதய துடிப்பு கண்காணிக்கும் அற்புதமான தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இதயம்
இந்த வாட்ச் ஜேம்ஸ் கிரீன் சாதாரணமான நிலையில் இருந்தபோது இவரது இதயம் இயல்பை விட அதிகமாக துடிப்பதாக காட்டியது, இதையடுத்து அவர் தனது மருத்துவமணைக்கு கால் செய்து விசாரித்தார்.

மருத்துவமணை
அதன்பின்பு ஜேம்ஸ் கிரீன் மருத்துவமணைக்கு சென்றுள்ளார் அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக ஜேம்ஸ் கிரீன் மருத்துவமனையில் இருந்ததால் அவர் உயிர் தப்பியுள்ளார்.

ஆப்பிள்
பொதுவாக ஆப்பிள் சாதனங்களின் விலை மிக உயர்வாக இருக்கும், இருந்தபோதிலும் சிறந்த தரம் மற்றும் அதிநவீன மென்பொருள் கொண்டு தயாரிக்கப்படுவதால் அனைத்து இடத்திலும் சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.