MCC ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேரர் உண்ணாவிரதம்
வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப தேரர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை இன்று (05) ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் (Millennium Challenge Corporation - MCC) ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர சதுக்கத்திலேயே வணக்கத்துக்குரிய உடுதும்பர காஷ்யப்ப தேரர் குறித்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.